பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீராங்கனை

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா தோல்வி அடைந்தார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீராங்கனை
Published on

ரியாத்:

54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலையாக அனிசிமோவா 2வது 6-3 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-3 என கைப்பற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சபலென்கா, ரிபாகினாவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com