சிட்டி ஓபன் டென்னிஸ்: மழையால் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

பெகுலா 6-4, 1-2 என்ற நிலையில் முன்னிலை பெற்றிருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.
பெகுலா- அலெக்சாண்ட்ரா ஈலா
பெகுலா- அலெக்சாண்ட்ரா ஈலா
Published on

கனமழையால் ஆட்டம் தடைபட்டு, இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெகுலா- அலெக்ஸாண்ட்ரா ஈலா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இறுதிப் போட்டியில் பெகுலா- ஈலா

சிட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்றிரவு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஈலாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஜெசிகா பெகுலா 6-4 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டில் பெகுலா 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தார். அப்போது மழை குறுக்கீடு செய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் கைவிடப்பட்டது. கைவிட்டப்பட்ட ஆட்டம் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் முடிவடைந்த இடத்தில் இருந்து தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோடார்- பிரிட்ஸ் பலப்பரீட்சை

நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் ஜோடார் 6(6)- 7(8), 6-4, 6-4 என வெற்றி பெற்று இறுதிக் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டைச் சேர்ந்த நகஷிமாவை 6-3, 3-6, 6-3 என வீழ்த்தினார்.

இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் டெய்லர் பிரிட்ஸ்- ரோஜர் ஜோடார் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com