ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
paula badosa
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, எகிப்தின் மயார் ஷெரிப் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய மயார் ஷெரிப் 7-6 (7-4) என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய பவுலா படோசா 2வது செட்டை 7-6(7-2) என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய மயார் ஷெரிப் 6-4 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com