தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை

சபலென்கா இந்த மைல்கல்லை எட்டிய 10-வது வீராங்கனை ஆவார்.
sabalenka
Published on

பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினா சபலென்கா முன்னணி வீராங்கனைகளில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

நம்பர் 1 வீராங்கனை

இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை 100 வாரங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டிய 10-வது வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

ஸ்டெபி கிராப் (377 வாரம்), மார்டினா நவரட்டிலோவா (332 வாரம்), செரீனா வில்லியம்ஸ் (319 வாரம்), கிறிஸ் எவர்ட் (260 வாரம்), மார்ட்டினா ஹிங்கிஸ் (209 வாரம்), மோனிகா செலஸ் (178 வாரம்), இகா ஸ்வியாடெக் (125 வாரம்), ஆஷ்லே பார்டி (121 வாரம்), ஜஸ்டின் ஹெனின் (107 வாரம்) போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய எலைட் கிளப்பில் சபலென்காவும் இணைந்துள்ளார்.

2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளை உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

100 வாரம்

100 வாரங்களைக் கடந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் சபலென்காவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் மாதம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். அதற்கு பிறகு நடந்த மேட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஆகியவற்றில் சபலென்கா தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் சபலென்கா தொடர்ந்து தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com