French Open டென்னிஸ்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய மென்சிக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
mensik
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் 6-4, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதி சுற்றில் மென்சிக், ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com