ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: அரையிறுதியில் நம்பர் 1 வீரர் அதிர்ச்சி தோல்வி

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: அரையிறுதியில் நம்பர் 1 வீரர் அதிர்ச்சி தோல்வி
Published on

பாரிஸ்:

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், செர்பிய வீரர் மெத்ஜெடோவிச் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com