பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
Published on

சிட்னி:

பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெகா 2வது சுற்ரில் காயம் காரணமாக விலகியதால் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com