

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த 3வது சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கேமரூன் நூரி 5-7, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், இத்தாலியில் லாரன்சோ முசெட்டி, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரபேல் ஜோடார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள நான்காவது சுற்றில் ரபேல் ஜோடார் செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடனும், கேமரூன் நூரி பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடனும் மோதுகின்றனர்.