கொரியா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது கிரெஜிசோவா ஜோடி

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.இதில் கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
கொரியா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது கிரெஜிசோவா ஜோடி
Published on

சியோல்:

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் நாட்டின் சினியாகோவா-கிரெஜ்சிகோவா ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி- ஆஸ்திட்ரேலியாவின் மாயா ஜாயிண்ட் ஜோடியுடன் மோதியது.

இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜ்சிகோவா ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com