

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் விலகினர்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் விலகி உள்ளனர்.
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கரோலினா முசோவாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்திய தொடர்களிலும் பங்கேற்கவில்லை.
இதேபோல், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும் சின்சினாட்டி ஓபன் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரசும் விலகியுள்ளார்.