சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா, எலினா ஸ்விடோலினா

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.
pegula
Published on

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் உக்ரைனின் எலின ஸ்விடோலினா, உஸ்பெகிஸ்தானின் குடர்மெடோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் மக்தலேனா உடன் மோதினார். இதில் போலந்து வீராங்கனை மக்தலேனா முதல் செட்டை 6-3 என வென்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஏற்கனவே ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று இரவு நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் நவோமி ஒசாகா, இத்தாலியின் எலிசாபெட்டா உடனும், ஜெசிகா பெகுலா, ரஷியாவின் கலின்ஸ்கயா உடனும் மோதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com