40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை
Published on

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

40 ஆண்டுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com