முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற டென்னிஸ் போட்டி: டாஸ் போட்ட பிரபல கால்பந்து வீரர்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற டென்னிஸ் போட்டி: டாஸ் போட்ட பிரபல கால்பந்து வீரர்
Published on

ரியாத்:

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

இதில் எலினா ரிபாகினா 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பவுலினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

முன்னதாக, போட்டி தொடங்கும் முன் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் டாஸ் போட்டு ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மார் கடந்த ஒரு ஆண்டாக போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com