ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா வீரர்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது. 3-வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வெற்றி பெற்றார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா வீரர்
Published on

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கனடா வீரர் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ், ஸ்பெயினின் அல்காரஸ் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com