துபாய் ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.இதில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நேரடியாக தகுதி பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கலின்ஸ்கயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com