சின்சினாட்டி ஓபன்: மேடிசன் கீஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த எலினா ரிபாகினா

4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா மற்றும் ஜெசிகா பௌசாஸ் மனிரோ மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சின்சினாட்டி ஓபன்: மேடிசன் கீஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த எலினா ரிபாகினா
Published on

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனை மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மற்றும் எலினா ரிபாகினா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் மேடிசன் கீஸ் கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா ரிபாகினா அடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

இதனால் எலினா ரிபாகினா 6-7 (3-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெசிகா பௌசாஸ் மனிரோ (ஸ்பானிஷ்) மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அரையிறுதி சபலென்கா மற்றும் ரிபாக்கினா நாளை மோதவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com