Stuttgart Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
bublik
Published on

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், ஜெர்மனியின் ஜேன்-லெனார்டு ஸ்ட்ரப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 6-3 என ஜெர்மன் வீரர் கைப்பற்ரினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பப்ளிக் 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் பப்ளிக், பிரான்ஸ் வீரர் பெரிகார்டுடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com