

வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ்- சிலியின் நிகோலஸ் ஜேரியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 10-8 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.