கனடா ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன், பொன்சேகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது
ben shelton
Published on

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா, நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பொன்சேகா 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள நான்காவது சுற்றில் பொன்சேகா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com