மியாமி ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, அசரென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் ரிபாகினா வென்றார்.
மியாமி ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, அசரென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மியாமி:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, டென்மார்க்கின் கிளாரா டாசனுடன் மோதினார்.

இதில் ரிபாகினா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 7-5, 6-4 என செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சுடன் மோதினார். இதில் அசரென்கா 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com