சிட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அனிருத் ஜோடி

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.
anirudh
Published on

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர்-உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடி, நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அனிருத் சந்திரசேகர் ஜோடி முதல் செட்டை 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக இத்தாலி ஜோடி 7-5 என வென்றது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அனிருத் சந்திரசேகர் ஜோடி 11-9 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com