

மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஸ்பெயினின் டேவிடோவிச் உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். டேவிடோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், ஹோல்ஜர் ரூனேவை சந்திக்கிறார்.