சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்
Published on

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com