பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், டி மினார் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், டி மினார் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மாட்ரிட்:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

இதில் டி மினார் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஈதன் குயினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com