புரோ கபடி லீக்: 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது தெலுங்கு டைட்டன்ஸ்

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.இன்று நடந்த எலிமினேட்டர் 3 ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக்: 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது தெலுங்கு டைட்டன்ஸ்
Published on

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இன்று நடந்த எலிமினேட்டர் 3 சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன.

இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நாளை நடைபெற உள்ள 2வது தகுதிச்சுற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புனேரி பால்டன் அணியுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com