தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.
tanvi sharma
Published on

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

தன்வி ஷர்மா அசத்தல்

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே தன்வி ஷர்மா அதிரடியாக ஆடினார்.

சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்றார்.

சாம்பியன் பட்டம்

இதேபோல், விறுவிறுப்பாக ஆடிய தன்வி ஷர்மா இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதியி தோல்வி அடைந்தார். ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com