தைபே ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.
tanvi sharma
Published on

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, சீன தைபே வீராங்கனையான ஹூயாங் யு ஹூன் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வியட்நாம் வீராங்கனை 21-15, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com