உலகக்கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி

அரைஇறுதியில் 5-3 என்ற கணக்கில் துருக்கியை தோற்கடித்து இறுதி சுற்றை எட்டினர். இறுதி ஆட்டத்தில் இந்திய குழுவினர், சீனாவின் தைபேயை சந்திக்கிறார்கள்.
உலகக்கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி
Published on

பாரீஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில், உலகக்கோப்பை வில்வித்தை (3-ம் நிலை) போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தகுதி சுற்றில் சற்று தடுமாறிய தீபிகா குமாரி, அங்கிதா பாகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் அதன் பிறகு உக்ரைன், இங்கிலாந்தை தோற்கடித்து அரைஇறுதிக்கு வந்தனர்.

இதன்பிறகு அரைஇறுதியில் 5-3 என்ற கணக்கில் துருக்கியை தோற்கடித்து இறுதி சுற்றை எட்டினர். இதனை தொடர்ந்து நாளை மறுதினம் நடக்கும் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய குழுவினர், சீனாவின் தைபேயை சந்திக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com