மழையால் ஆட்டம் பாதிப்பு - முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 161/2

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்தார்.
அரை சதமடித்த பாபர் அசாம்
அரை சதமடித்த பாபர் அசாம்
Published on

டாக்கா:

வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அபித் அலி, அப்துல்லா ஷபிக் களமிறங்கினர். அபித் அலி 39 ரன்னிலும், ஷபிக் 25 ரன்னிலும் அவுட்டாகினர். 

அடுத்து இறங்கிய அசார் அலியுடன், கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பாபர் அசாம் பொறுப்புடன் அரை சதமடித்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com