ஐபிஎல் 2022: டெல்லிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ரன்கள் எடுத்தனர்.
கிரிக்கெட் வீரர் அஷ்வின்
கிரிக்கெட் வீரர் அஷ்வின்
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 38 பந்துகளில் இரண்டு 6, 4 பவுண்டரி என 50 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 48 ரன்கள், ஜெய்ஸ்வால் 19 ரன்கள், ராசி வான் தேர் துசன் 12 ரன்கள் (நாட் அவுட்), ரியான் பராக் 9 ரன்கள், ஜோஸ் பட்லர் 7 ரன்கள், டிரென்ட் பவுல்ட் 3 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரப்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com