பாகிஸ்தான் வீரரை எடுத்த சன்ரைசர்ஸ்... முடக்கப்பட்ட அணியின் எக்ஸ் பக்கம்

இந்திய உரிமையாளர்களைக் கொண்ட அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' தொடருக்காக வாங்கப்பட்டார்.
பாகிஸ்தான் வீரரை எடுத்த சன்ரைசர்ஸ்... முடக்கப்பட்ட அணியின் எக்ஸ் பக்கம்
Published on

இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது. இதற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவின் தேசிய உணர்வுக்கு எதிராக அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் செயல்பட்டதாக கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அகமதுவை எடுத்த சில மணிநேரத்திலேயே பலரும் அணியை எக்ஸ் பக்கத்தை ரிப்போர்ட் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அணியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அந்தக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இருப்பினும், ஃபோலோவர்ஸ் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. தற்போது ஃபாலோவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனிடையே இதுதொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கண்டனங்கள் வலுத்துவருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com