மாநில கூடைப்பந்து இந்தியன் வங்கி அணி சாம்பியன்

எஸ்.டி.ஏ.டி, ஜேப்பியார், எத்திராஜ் கல்லூரி ஆகியவை 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன.அதுல்யா மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
மாநில கூடைப்பந்து இந்தியன் வங்கி அணி சாம்பியன்
Published on

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 20-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை 8 நாட்கள் நடந்தது. இதில் 54 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. எஸ்.டி.ஏ.டி. 2-வது இடத்தையும், லயோலா கல்லூரி 3-ம் இடத்தையும், திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் முதல் இடத்தை பிடித்தது. எஸ்.டி.ஏ.டி, ஜேப்பியார், எத்திராஜ் கல்லூரி ஆகியவை 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். டாக்டர் ஏ.எம்.செல்வராஜ், கே.எத்திராஜ், ஜி.பி.எஸ். நாகேந்திரன், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கோபி, செயலாளர் எம்.கனக சுந்தரம், துணைத்தலைவர் எஸ்.எஸ். குமார், பொருளாளர் ரகுராம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com