

கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் எஸ்.எப்.லீ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லீ 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.