டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். கால் இறுதியில் லக்‌ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி
Published on

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

முன்னாள் சாம்பியனான அவர் சிங்கப்பூரின் லோ கீன்யூலிடம் 13-21, 15-21 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-9, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரணாய்யை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெறும் கால் இறுதியில் லக்‌ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரெங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோவூய்யிக் ஜோடியுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com