பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
Sreeja Akula
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் அகுளா 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com