செஞ்சூரியன் டெஸ்ட்- இரண்டாம் நாள் ஆட்டத்தை காலி செய்த மழை

செஞ்சூரியனில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழையால் தாமதம் என அறிவிப்பு
மழையால் தாமதம் என அறிவிப்பு
Published on

செஞ்சூரியன்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார்.

புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி 35 ரன்னிலும் அவுட்டானார்கள். இதனால் முதல் நாள்  ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆடுகளம் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மைதானத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்றது. ஆனால், விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com