பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் சரத் கமல், பி.வி.சிந்து

ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: தேசிய கொடியை ஏந்திச்செல்லும் சரத் கமல், பி.வி.சிந்து
Published on

புதுடெல்லி:

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com