சீனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப்: நாளை முதல் தொடக்கம்

நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. புரோ கபடி லீக் சீசன் 12-ல் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.
சீனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப்: நாளை முதல் தொடக்கம்
Published on

குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் 72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை (பிப்ரவரி 24) தொடங்கி பிப்ரவரி 27 வரை நடைபெறவுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

சமீபத்தில் முடிவடைந்த புரோ கபடி லீக் (PKL) சீசன் 12-ல் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சர்வீசஸ் (Services) அணி, இந்த முறையும் தேவாங்க் தலால், நவீன் குமார், பாரத் ஹூடா போன்ற நட்சத்திர வீரர்களுடன் பட்டத்தைத் தக்கவைக்கப் போராடும். இவர்களுக்கு ரயில்வே, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள், இந்தியத் தேசிய கபடி அணிக்கும், தேசிய பயிற்சி முகாம்களுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com