உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி
Published on

பாரிஸ்:

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com