தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சாய் பிரனீத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சாய் பிரனீத்
சாய் பிரனீத்
Published on

பாங்காங்:

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜின் ஜியோனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை சாய் பிரனீத் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜியோன் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்டு ஆடிய சாய் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை தனதாக்கினார்.

இறுதியில், சாய் பிரனீத் 24-22, 7-22, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com