டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி
Published on

கோபன்ஹேகன்:

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யுகோ கொபயாஷி-டகுரோ ஹோகி ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் ஜோடி 23-21, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com