கொரியா ஓபன்: முதல் சுற்றில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி

தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
கொரியா ஓபன்: முதல் சுற்றில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி
Published on

சியோல்:

தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா-ஸ்வேதாபர்னா ஜோடி, சீன-தைபேவின் ஹை பெய் ஷா-ஹங் என் சு ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 18-21, 5-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டி சுமார் 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

நாளை நடைபெற உள்ள பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மால்விகா பன்சோத் மற்றும் அஷ்மிதா சாலிஹா விளையாட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com