'சொந்த மண்ணில் வீடு கட்ட வேண்டும்':நள்ளிரவில் உத்தரகாண்ட் முதல்வரிடம் ரிஷப் பண்ட் கோரிக்கை!

தனது சொந்த மாநில மக்களுக்கு சேவை செய்யவும், தனது முதல் சொந்த வீட்டை உத்தரகாண்டில் கட்டவும் விரும்புவதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
Rishabh Pant-Pushkar Singh Dhami
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட் தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கும் வசிப்பிடத்தை மாற்றுவதற்கும் நிலம் பெற உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தனது எக்ஸ் தளத்தில் நள்ளிரவில் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 ஆண்டு கால காத்திருப்பு

டெல்லியிலிருந்து தனது வசிப்பிடத்தை உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நிலம் வாங்குவது ஒரு பெரும் கனவாக மாறிவிட்டதாகவும் பண்ட் குறிப்பிட்டுள்ளார். அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்கத் தயாராக இருப்பதாகவும், இலவசமாக எந்த நிலத்தையும் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

சொந்த மண் பாசம்

தனது சொந்த மாநில மக்களுக்கு சேவை செய்யவும், தனது முதல் சொந்த வீட்டை உத்தரகாண்டில் கட்டவும் விரும்புவதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பதில்

பண்ட்டின் பதிவுக்குப் பதிலளித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "நீங்கள் உத்தரகாண்டின் பெருமை" எனக் கூறி, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விதிகளுக்கு உட்பட்டு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள நிலையில், பண்ட்டின் இந்த பதிவும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com