ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய பிவி சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பிவிசிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதின.ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய பிவி சிந்து
Published on

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர் ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், எச்.அஸ்.பிரணாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

இவர் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன், கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com