Singapore Open பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
PV Sindhu
Published on

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் ஆன் சே யங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய வீராங்கனை 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்முலம் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com