

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் மோதினர்.
முதல் செட்டை கரோலினா வென்றார். 2-வது செட்டை பிவி சிந்து கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.
இந்த போட்டியின்போது பிவி சிந்துவும், கரோலினாவும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இருவரும் இதற்கு முன் பல போட்டிகளில் மோதியுள்ளனர். அப்போது தோழமையாகவே இருந்துள்ளனர். இந்த போட்டியில் மோதிக்கண்டது அரியதாக பார்க்கப்படுகிறது.
இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரித்தார்.
கரோலினா ஒரு சர்வீஸை வென்றதும் நீண்ட நேரம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக பிவி சிந்து கோபம் கொண்டார். சர்வீஸ் செய்ய பிவி சிந்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கரோலினா குற்றம்சாட்டியதால் வார்த்தைப்போர் ஏற்பட்டது.