டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து
Published on

கோபன்ஹெகன்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com