சையத் மோடி பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
சையத் மோடி பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
Published on

லக்னோ:

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com