இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார்.இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
Published on

புதுடெல்லி:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். முன்னாள் தடகள வீராங்கனையான இவர் ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை பி.டி. உஷா மறுத்தார்.

இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வருகிற 25-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அவர் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com