புரோ கபடி: புதிய இளம் வீரருக்கான விருதை வென்ற தமிழ்நாடு வீரர் தீபக் சங்கர்

புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது. ப்ரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகளை தமிழக வீரர் தீபக் சங்கர் எடுத்தார்.
புரோ கபடி: புதிய இளம் வீரருக்கான விருதை வென்ற தமிழ்நாடு வீரர் தீபக் சங்கர்
Published on

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.

இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

இந்நிலையில் புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகள் எடுத்து பலரையும் கவர்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் தீபக் சங்கர், இந்த சீசனின் புதிய இளம் வீரருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com